ஜீவ வார்த்தை (Jeeva Vaarthai) is a Tamil Bible Study ministry offering in-depth, verse-by-verse teaching from the Old and New Testaments. Each episode explores Scripture in Tamil with Greek and Hebrew word studies, practical application, and spiritual insight. Topics include 1 Corinthians, Psalms, the Sermon on the Mount, and more. | தமிழிலும் ஆங்கிலத்திலும் வேத வசன ஆய்வு — உங்கள் விசுவாசத்தை வளர்க்க உதவும் ஆன்மீக போதனைகள்.
கிறிஸ்துவின் சந்நிதானத்தில் மன்னித்தல் என்றால் என்ன? மன்னியாமையால் சாத்தான் எப்படி ஆதாயம் அடைகிறான்?
“எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.” — 2 கொரிந்தியர் 2:10அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய நிருபத்தில், தவறு செய்த ஒருவரை மன்னித்து, ஆறுதல்படுத்தி, அவரிடத்தில் அன்பை உறுதிப்படுத்தும்படி அறிவுறுத்துகிறார்.அவர் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்தில் மன்னித்திருப்பதாகக் கூறுவதோடு, சாத்தானால் நாம் மோசம்போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் போதிக்கிறார்.#மன்னித்தல் #Forgiveness #TamilBibleStudy #கிறிஸ்துவின்சந்நிதானத்தில் #2கொரிந்தியர் #BibleMeditation #JesusChrist #TamilChristianMessage #வேததியானம் #மனப்பூர்வமாகமன்னித்தல்
6 Nov 2026
தேவனின் மனதுருக்கம் (Lord's Compassion)
"கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்." – சங்கீதம் 145:8இந்த தியானத்தில், தேவனுடைய திவ்ய சுபாவங்களில் ஒன்றான அவருடைய மனதுருக்கத்தைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய இரக்கங்கள், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக செயலாக வெளிப்பட்ட மனதுருக்கம், அப்போஸ்தல உபதேசங்கள் நமக்குக் கற்றுக்கொடுப்பது, அந்த மனதுருக்கத்தை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்பதை தியானிக்கிறோம்.நாம் கற்றுக்கொள்வது:• மனதுருக்கம் தேவனுடைய சுபாவம் – அவருடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள்.• இயேசுவின் மனதுருக்கம் செயலாக வெளிப்பட்டது – சுகமாக்கினார், உணவளித்தார், ஆறுதல் சொன்னார்.• அவருடைய இரக்கத்தை அசட்டைபண்ணாமல், கீழ்ப்படிதலோடும் மனந்திரும்புதலோடும் வாழ வேண்டும்.• மற்றவர்களை மன்னிப்பதன் மூலமும், அவர்களுடைய தேவைகளில் உதவுவதன் மூலமும் அந்த மனதுருக்கத்தை பிரதிபலிப்போம்.இன்று தியானித்த வார்த்தைகளிலிருந்து உங்களுக்கு கூடுதல் சிந்தனைகள் இருந்தால் கமெண்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.#தேவனின்மனதுருக்கம் (https://www.youtube.com/hashtag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D) #LordsCompassion (https://www.youtube.com/hashtag/lordscompassion) #வேததியானம் (https://www.youtube.com/hashtag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D) #TamilChristianMessage (https://www.youtube.com/hashtag/tamilchristianmessage) #TamilSermon (https://www.youtube.com/hashtag/tamilsermon) #இயேசு (https://www.youtube.com/hashtag/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81) #Bible (https://www.youtube.com/hashtag/bible)
1 Nov 2026
நாம் ஏன் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
இந்த வேத தியானத்தில் பரிசுத்தமாகுதலைக் குறித்து மூன்று முக்கியமான பகுதிகளை ஆராய்கிறோம்.1. ஆவிக்குரிய பரிசுத்தம்பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் பெற்றுக்கொள்வது.2. சரீர மற்றும் ஒழுக்கப் பரிசுத்தம்நம்முடைய சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, பாவ இச்சைகளிலிருந்து விலகி, சரீரத்தை தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தல்.3. ஆராதனை மற்றும் சமூக வாழ்க்கையின் பரிசுத்தம்உண்மையான ஆராதனை, நன்மை செய்தல், தானதர்மம், நாவை அடக்குதல், ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவுதல், நீதியிலும் இரக்கத்திலும் விசுவாசத்திலும் நடப்பது.#பரிசுத்தம் #பரிசுத்தமாகுதல் #வேததியானம் #TamilBibleStudy #Holiness #Sanctification #TamilChristianMessage #BibleStudyTamil
Contact Jeeva Vaarthai - Tamil Bible Study
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Jeeva Vaarthai - Tamil Bible Study?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine