உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2
நற்செய்திகளைப் பற்றிய இந்த அற்புதமான ஆய்வில், தேவனுடைய அன்பை மீண்டும் புதிதாக அனுபவியுங்கள்! இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில், மத்தேயு நற்செய்தியில் உள்ள ராஜாதி ராஜாவின் ஈடு இணையற்ற மகத்துவத்தையும் இரக்கத்தையும் ஜோசப் பிரின்ஸ் உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். உங்கள் மேல் இருக்கும் ஆண்டவருடைய அற்புதமான கிருபையின் பொக்கிஷங்களைக் கண்டறிந்து, உங்கள் அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள உங்கள் விசுவாசம் சிரமமின்றி எழுவதை பாருங்கள். சிலுவையில் நடந்த தெய்வீகப் பரிமாற்றம், உங்கள் கடந்தகாலத் தோல்விகள் இருந்தபோதிலும், உங்கள் குணமாக்குதலுக்கு எப்படி விலைகொடுத்தது, அவமானத்தின் ஒவ்வொரு சுவட்டிலிருந்தும் உங்களை மீட்டது, மற்றும் அவருடைய ராஜ்யத்தில் வல்லமையுள்ளவராக இருக்க உங்களைத் தகுதிப்படுத்தியது என்பதைக் கண்டறியுங்கள். மிகுந்த கிருபையுள்ள தேவனை கண்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நிறைவாக ஆளுகை செய்யுங்கள்!
29 Oct 2026
உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள்
ஜோசப் பிரின்ஸ் அவர்கள் நான்கு சுவிசேஷங்களை பொக்கிஷங்களை திறப்பதற்கான திறவுகோல்களை கொடுக்கிற வேளையில் நான்கு மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சுவிசேஷத்தின் பிரதான கவனத்தை புரிந்துகொண்டு பலதரப்பட்ட தெய்வீக கோணங்களில் உங்கள் இரட்சகரின் சிறப்பாற்றலையும் அழகையும் காணுங்கள். ஏன் யோவான் சுவிசேஷம் தனித்து நிற்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த செய்தியானது நீங்கள் சுவிசேஷங்களை வாசிக்க உங்களை பரவசப்படுத்துவதோடு நம்முடைய கர்த்தருடைய பலதரப்பட்ட முகங்களான - ராஜா, பணிவிடைக்காரர், இரட்சகர், குமாரன் என்பதை அறிந்து உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நான்கு சுவிசேஷங்களில் அவர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார் என்பதை அறிந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் என்று அக்டோபர் 9, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.
22 Oct 2026
தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள் - பகுதி 2
கர்த்தருடைய விருந்தில் விடுதலையளிக்கும் வல்லமை இருக்கிறது! திருவிருந்து குறித்த உபதேசத்தின் இரண்டாவது பகுதியில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கிடைத்துள்ள மன்னிப்பு மற்றும் சுகத்தை கொண்டாடுவதற்கும், அதே வேளையில் கர்த்தரின் சுகம், ஆரோக்கியம், பலன் மற்றும் முழுமையான நலம் ஆகியவற்றை நடைமுறையில் பெற்றுக்கொள்வதற்கும் திருவிருந்து எப்படி ஒரு வழியாக அமைகிறது என்பதை ஜோசப் பிரின்ஸ் விளக்குகிறார். விசுவாசிகளுக்கு, குறிப்பாக இருளான காலங்களில், எல்லாத் தீமைகளுக்கும் எதிராக இது எப்படி தேவனுடைய பாதுகாப்பாக அமைகிறது என்பதையும் வேதவசனங்களிலிருந்து அறிந்துகொள்ளுங்கள். இன்றே விசுவாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இதில் பங்கேற்கத் தொடங்குங்கள்; நோயிலிருந்தும் அழிவிலிருந்தும் உங்களை விடுவிக்கும் அவருடைய வல்லமையை அனுபவியுங்கள்!
இந்த அத்தியாயம் குறித்து,
ஆகஸ்ட் 7, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் வழங்கிய 'Eat Your Way To Divine Health' (தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்) — பகுதி 2 என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
Contact Joseph Prince
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Joseph Prince?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine