About பெரியபுராணம் by Dr. Vijayalakshmi Ramshankar
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இந்த podcast மூலமாக பெரியபுராணம் போன்ற ஒரு மகா காவியத்தை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
தம்பிரான் தோழர் என்று அன்புடன் அழைக்கப்படும் சுந்தரர், நாயன்மார்கள் வரிசையில் மிக முக்கியமாக கருதப்படுபவர். பெரியபுராணத்தில் ஏழாவது தொகுதியான திருமுறை, இவரால் எழுதப்பட்டது.
இந்த எபிசோடில் நாம் சுந்தரர் எப்படி சைவ மதத்திற்கு ஈர்க்கப்பட்டார் என்பதை பார்ப்போம்.
22 May 2020
Ep04. திருமலை சிறப்பு
இந்த அத்தியாயத்தில் நாம் கைலாய மலையின் சிறப்பையும், சுந்தர பெருமானை உபமன்யு முனிவர் வணங்கியதை பற்றியும் பார்ப்போம்.
அதே சமயம், இன்று நாம் தென்னாட்டு பெருமை பற்றியும், திருத்தொண்ட தொகை பற்றியும் கேட்போம்.
19 May 2020
Ep03 - கடவுள் வாழ்த்து (Songs 1-10)
சேக்கிழார் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்று, அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கி, பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் இந்த புராணத்தினை முடித்தார்.
இந்த அத்தியாயத்தில் நாம் முதல் பத்து பாடல்களை பார்ப்போம்.
16 May 2020
Ep02.சேக்கிழார் வரலாறு
சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D) அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர்.
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D) எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D) எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.
15 May 2020
பெரியபுராணம் - ஒரு முன்னுரை
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D) அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D). சுந்தரமூர்த்தி சுவாமிகளின் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D) திருத்தொண்டத் தொகை (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88) எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இந்த podcast மூலமாக பெரியபுராணம் போன்ற ஒரு மகா காவியத்தை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Contact பெரியபுராணம் by Dr. Vijayalakshmi Ramshankar
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of பெரியபுராணம் by Dr. Vijayalakshmi Ramshankar?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine