கம்பராமாயணம்...
காண்டம்-யுத்த காண்டம்
படலம் -இராவணன் சோகப் படலம் .
பாடல் எண் -612
நாள்
கம்பராமாயணம்...
காண்டம்-யுத்த காண்டம்
படலம் -இராவணன் சோகப் படலம் .
பாடல் எண் -612
நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள்.
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை .
விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை .
கு.பாஸ்கர் ....... அபுதாபி
5 Jan 2024
சிறார் கதைகள்
நூல் : அண்டா மழை
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம் : வானம்
கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்
9 Dec 2023
கம்பராமாயணம் 585
கம்பராமாயணம்..
கருடன் இராமனைத் துதித்தல்...
காண்டம் -யுத்த காண்டம்.
படலம் -நாகபாசப் படலம்.
பாடல் எண் -585
நாள் -ஐந்நூற்று எண்பத்து ஐந்தாவது நாள் .
எறிந்தாரும்,ஏறுபடுவாறும்,இன்ன
பொருள் கண்டு இரங்குபவரும்
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை
தெரிகின்றது ,உள்ளது இடையே
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி
பிறியாது நிற்றி பெரியோய்
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இல்
அதிரேக மாயை அறிவார் ?.
விளக்கம் -பெரியவனே -படைக்கலன்களை எறிபவரும்,அதனால் காயப் படுபவர்களும்,இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவரும் ,நெருங்கி இருந்து வாழ்பவர்கள் இடத்திலும் நீ ஒருங்கு கலந்திருப்பது உண்மை என்ற செய்தி உன்னில் தெரிகின்றது.அறிவில் இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும் அவர்களிடம் இருந்து பிரிந்து போகிறாய் , அவ்வாறு பிரிந்தாலும் கூட அந்தர்மியாகப் பிரியாமல் இருக்கிறாய் ,தத்துவ ஞானிகள் உண்மை உணர்வால் ஆய்ந்து அறிந்த மெய் பொருளாகவும் விளங்குகிறாய் இந்த மிகுதியான மாயையை யார் அறிவார்?.
கு.பாஸ்கர் ....... அபுதாபி
Reach and audience
Public platform figures. Ratings count people who left a rating, not total listeners.
Spotify
5.0 / 5
1 ratings
Host of பொதிகைச் சாரல் ?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine