பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.
தமிழ் வளர்த்த தங்கங்கள் 12- திரு. மாயூரம் வேதநாயகம்
திரு வேதநாயகம் அவர்கள், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்துள்ள குளத்தூரில் சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரியம்மாளுக்கும் புதல்வராக 1826-ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்ற அவர், அதன்பின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கல்வியை புலவர் தியாகராசப் பிள்ளையிடம் பயின்றார். அவர் பல மொழிகளைக் கற்றறிந்தார். சிறு வயதிலேயே கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருந்தார். தொடக்கத்தில் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார்.
11 Oct 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 11- திரு. கதிரவேற்பிள்ளை
இலங்கை நாட்டில் , திரு நாகப்ப பிள்ளைக்கும், திரு சிவகாமி அம்மையாருக்கும் , 1871ம் ஆண்டு
டிசம்பர் 21 ந் தேதி பிறந்தார் கதிரைவேற் பிள்ளை. இலங்கையிலேயே ஆரம்பக்கல்வியைக் கற்ற அவர், குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர இல்லாவிட்டாலும், மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பவரிடம் தனது ஆர்வத்தால் முறையாகக் கல்வி கற்று, பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்க நூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.
16 Sept 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 10- திரு.வி. கலியாணசுந்தரனார்
திரு.வி.க. சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள்.
ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமும், அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க., பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர்
13 Aug 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - ரா.பி.சேதுப்பிள்ளை
திரு சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில், இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை திண்ணைப் பள்ளியில் கற்ற சேது, பின்னர் அருணாசல தேசிகரிடம் அடிப்படை இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபின், இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமிழார்வமும் ஆராய்ச்சி வேகமும் கொண்டிருந்த சேதுப்பிள்ளைக்குப் பச்சையப்பன் கல்லூரிச் சூழல் ஆர்வத்தை அதிகரித்தது. படித்து முடிந்ததும் பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கினார்.
14 Jul 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - மறைமலை அடிகள்
நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பட்டியில், சொக்கநாதர், சின்னம்மை தம்பதியினருக்கு, 1876 ம் ஆண்டு, சூலைத் திங்கள்,15ம் நாள் பிறந்த அவரது இயற்பெயர் வேதாசலம். பள்ளிப் படிப்பைக் கூட முழுக்க முடியாதிருந்த குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் தனக்கு தமிழின் மீதிருந்த ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் சிறு வயதிலேயே பல தொல்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பல தமிழறிஞர்களுக்கு தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்று தேர்ச்சி பெற்ற திரு நாராயணசாமிப் பிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தருக்க நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த அறிவு பெற்றார் மறைமலை அடிகளார்.
11 Jun 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - பரிதிமாற்கலைஞர்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘சூரிய நாராயண சாஸ்திரி’ எனும் வடமொழிப் பெயர் நீக்கி ‘பரிதிமாற்கலைஞர்’ என்று தனித் தமிழில் பெயர் மாற்றி, உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்த பரிதிமாற் கலைஞர் அவர்களைப் பற்றிதான் இவ்விதழில் காணவுள்ளோம்
9 May 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 6 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
சுந்தரம் பிள்ளையவர்கள். ‘கருவிலே திருவுடையார்’ எனக் கூறுவது போல பிள்ளையவர்கள் கருவிலே தமிழுடையார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப் பின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது வந்துதித்த புலமைக் கதிரவன் , கருணைத் தாயுள்ளம் கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றால் அதில் சிறிதும் மிகையில்லை.
8 Apr 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 5 - தேவநேயப் பாவாணர்
இச்சித்திரை சிறப்பிதழில் நாம் தெரிந்து கொள்ளப் போகும் தமிழ் வளர்த்த தங்கம் யார் தெரியுமா?
மொழி ஞாயிறு என்றும் சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் என்றும் போற்றப்படும் தேவநேயப் பாவாணர் அவர்களைப் பற்றித்தான் காணப்போகிறோம்.
எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா - மூச்சிழுக்கும் வல்லொலியதில் இல்லை பாப்பா
பேசு பாப்பா – தமிழ் பேசு பாப்பா...' என்று எளிமையாகத் தமிழின் பெருமையை விளக்கி குழந்தைகளையும் தமிழிலேயே பேச அறிவுறுத்தியவர் தேவநேயப் பாவாணர்.
8 Apr 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 3 - வ.உ.சிதம்பரனார்
அன்புள்ள பைந்தமிழ் வாசகச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழ் வளர்த்த தங்கங்களில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்முறை நாம் அறிந்து கொள்ளவிருக்கும் தங்கத் தமிழ் மகன் யார் தெரியுமா? செக்கிழுத்த செம்மல் எனவும், கப்பலோட்டிய தமிழன் எனவும் அனைவராலும் அறியப்படும் வ.உ.சி என்னும் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.
8 Apr 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 2 - ம. பொ. சிவஞானம்
பைந்தமிழ் இதழில் வெளியாகும் தமிழ் வளர்த்த தங்கங்கள் என்ற கட்டுரையில் மார்கழி 2019 இதழில் நாம் எண்ணி பெருமை கொள்பவர் ம. பொ. சிவஞானம் ஐயா அவர்கள். கட்டுரை வடிவில் உள்ள இந்த இதழ் தொடரை உங்களுக்காக எழுத்திலும் குரலிலும் அளிப்பவர் திருமதி.சங்கீத செல்வின்
8 Mar 2020
தமிழ் வளர்த்த தங்கங்கள் 4 - திரு தேசிக விநாயகம் பிள்ளை
குழந்தைத் தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித் தடம் பதித்த, ஈயும் எனக்குத் தோழன் – ஊரும் எறும்பும் எனக்கு நேசன்; நாயும் எனக்குத் தோழன் - குள்ளநரியும் எனக்கு நண்பன்! எனத் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதிய கவிமணி, திரு தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்தான்.
Contact தமிழ் வளர்த்த தங்கங்கள்
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of தமிழ் வளர்த்த தங்கங்கள்?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine